தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு,பாடலாசிரியர்,பாடகர் என பன்முக திறமை கொண்டவராக அசத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

நடிப்பு,நடனம்,காமெடி,எமோஷன் என ஆல் இன் ஒன் Entertainer ஆக சிவகார்த்திகேயன் அவதரித்துள்ளார்.இவர் நடித்துள்ள ப்ரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஸ்ரீ  வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த படம் தமிழ்,தெலுங்கில் Bilingual-ஆக உருவாகிறது.

அனுதீப் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சத்யராஜ்,பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் Maria Ryaboshapka என்ற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் சில பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ப்ரின்ஸ் பட ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் சிவகார்த்திகேயன் நமது கலாட்டாவிற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.அதில் ப்ரின்ஸ் படம் ஒரு ஜாலியான படம் தான் அதில் ஒரு கருத்தினையும் முன்னிறுத்தி படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் எடுத்துள்ளோம்.வித்தியாசமான நகைச்சுவை படமாக ப்ரின்ஸ் இருக்கும் என சிவகார்த்திகேயன் நமபிக்கை தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்