தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் முதல் முறை நாகசைதன்யா உடன் இணைந்து நடித்துள்ள தெலுங்கு வெப் சீரிஸான தூதா விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாக தயாராகி வருகிறது.இந்த ஆண்டில் (2022) இதுவரை வெளிவந்த ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள அகிலன், மான்ஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் SJ.சூர்யாவுடன் நடித்துள்ள பொம்மை மற்றும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்துள்ள ருத்ரன் என ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்திலும் மிக முக்கிய வேடத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பெண்குயின் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் புதிய படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல தெலுங்கு நடிகர்களான சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்ஜெயா இருவரும் இணைந்து இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிக்கும் இந்த புதிய படத்துக்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி, ஒளிப்பதிவில், அணில் க்ரிஷ் படத்தொகுப்பு செய்ய, சரண் ராஜ் இசையமைக்கவுள்ளார்.

சத்ய தேவ் மற்றும் டாலி தனஞ்ஜெயா இருவருக்கும் இத்திரைப்படம் 26-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிப்பதை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

.@OldTownPictures Prod No.1 Welcomes the charismatic and highly talented actress @priya_Bshankar Aboard ❤️‍🔥

Shoot in progress🎬#SatyaDev26 #Dhananjay26@ActorSatyaDev @Dhananjayaka @EashvarKarthic @mk10kchary @charanrajmr2701 @anilkrish88 @BalaSundaram_OT #DineshSundaram pic.twitter.com/Jdl1ZoQ5NG

— Old Town Pictures (@OldTownPictures) October 15, 2022