தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் கத்ரகடா முராரி தனது யுவ சித்ரா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். கடந்த 1978ஆம் ஆண்டு இயக்குனர் கே விஸ்வநாத் இயக்கத்தில் சந்திரமோகன் கதாநாயகனாக நடித்த சீதா மகாலட்சுமி திரைப்படத்தை தனது முதல் திரைப்படமாக தயாரித்தார்.

தொடர்ந்து நடிகர் சோபன்பாபு கதாநாயகனாக நடித்த கோரின்டகு & அபிமன்யுடு, கிருஷ்ணம் ராஜு கதாநாயகனாக நடித்த திரிசூலம், வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்த ஸ்ரீனிவாச கல்யாணம், நாகார்ஜூனா கதாநாயகனாக நடித்த ஜானகி ராமடு மற்றும் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்த சீதாராம கல்யாணம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

கடைசியாக பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்த நாரி நாரி நடுமா முராரி படத்தை கடந்த 1990ஆம் ஆண்டு தயாரித்த தயாரிப்பாளர் கத்ரகடா முராரி பின்னர் தனது திரைப்பட தயாரிப்பு பணிகளில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி உடல் நலக்குறைவு காரணமாக கத்ரகடா முராரி காலமானார்.

கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தயாரிப்பாளர் கத்ரகடா முராரி தனது 78வது வயதில் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
 

Senior Producer Katragadda Murari Garu (78) passed away at his home in Chennai.

May his soul rest in peace. pic.twitter.com/60ifKPcOD7

— Vamsi Kaka (@vamsikaka) October 15, 2022