பிரம்மாண்டத்தின் உச்சமாக எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.  

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

ரவிவர்மன் ஒளிப்பதிவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம் பிரபுவின் பார்த்திபேந்திர பல்லவன், இளைய திலகம் பிரபுவின் பெரிய வேளாளர் பூதி விக்ரம கேசரி, நடிகர் லால் நடித்திருக்கும் திருக்கோவிலூர் மலையமான் ஆகிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

Brave. Fierce. Loyal.
Friends in need, protectors indeed.

Meet @iamvikramprabhu as Parthibendran Pallavan, Prabhu as Periya Velaar and @LalDirector as Malayaman!#PS1 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/xFNIlhjlH4

— Madras Talkies (@MadrasTalkies_) September 4, 2022