தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஓ மை கடவுளே. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்தார்.

இதனிடையே தற்போது ஓ மை கடவுளே திரைப்படம் தெலுங்கில் ஓரி தேவுடா என்ற பெயரில் ரீமேக் ஆனது. இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஷ்வக் சென், மிதிலா மற்றும் ஆஷா இணைந்து நடித்திருக்கும் ஓரி தேவுடா திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி, விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

PVP CINEMAS & ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ஓரி தேவுடா திரைப்படத்திற்கு தருண் பாஸ்கர் வசனங்கள் எழுதியுள்ளார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய, விஜய் முக்தாவரப்பு படத்தொகுப்பு செய்துள்ள ஓரி தேவுடா படத்திற்கு சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தமிழில் இசையமைத்த இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் தெலுங்கிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஓரி தேவுடா திரைப்படத்திலிருந்து, குண்டேலோனா பாடல் தற்போது வெளியானது. இப்பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அசத்தலான குண்டேலோனா பாடலை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.