நீண்ட காலமாக காதலித்து வந்த செலிபிரிட்டி ஜோடியான இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றிணைந்த இவர்களின் திருமணம் சென்னையின் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கார்த்தி போனிகபூர், ஷாலினி, இயக்குனர் விஜய்.AL, DD-திவ்ய தர்ஷினி, மலையாள நடிகர் திலீப், இயக்குனர் மணிரத்னம், சுகாசினி, எடிட்டர் மோகன், இயக்குனர் மோகன் ராஜா, இயக்குனர் அட்லி, நடிகர் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் படமாக்கப்பட்டு விரைவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அட்டகாசமான விருந்து ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றனர.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் காலை 8.30 மணயளவில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இதர நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.