கூட்டாளிகளுடன் வந்த தாயின் கள்ளக் காதலன்! மகளை பலாத்காரம் செய்ய அனுமதித்த கொடூர தாய்!

கூட்டாளிகளுடன் வந்த தாயின் கள்ளக் காதலன்! மகளை பலாத்காரம் செய்ய அனுமதித்த கொடூர தாய்! - Daily news

தாயின் கள்ளக் காதலன், கூட்டாளியுடன் வந்து காதலியின் மகளை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்பிரதேச நிலத்தில் தான் இப்படியான அதிர்ச்சி சம்பவம் அரங்குறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்ராயா பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவன் எதிர்பாரத விதமாக உயிரிழந்து உள்ளார்.

இதனால், அந்த பெண் தனது 16 வயது மகளுடன், தனியாக வசித்து வந்தார். 

இந்த சூழலில்தான், கணவனை இழந்த இந்த பெண்ணிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில்  கள்ளக் காதலாக மாறி உள்ளது. 

இதனால், அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சந்தோஷ், அந்த பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறான்.

ஒரு கட்டத்தில், தாயாரின் கள்ளக் காதல் விவாகாரம், அவருடைய மகளுக்கு தெரிய வந்தது. இதனால், எரிச்சல் அடைந்த அந்த 16 வயதான சிறுமி, இது குறித்து, தனது தாயிடம் விளக்கம் கேட்டு சண்டைப் போட்டு உள்ளார்.

அப்போது, தந்த தாயார் தனது மகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. “தந்தை இல்லாத நிலையில், தாயாரை என்ன செய்வது என்று தெரியாத” அந்த 16 வயது சிறுமி, தாயின் இந்த செயலைப் பொறுத்துக் கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார்.

இப்படியான சூழலில் தான், கடந்த 20 ஆம் தேதி அன்று இரவு வழக்கம் போல் கள்ளக் காதலன் சந்தோஷ், கள்ளக் காதலியை தேடி வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, வழக்கத்திற்கு மாறாக, அவருடன் அவரது நண்பர்களான ஆகாஷ், கந்தைலால் ஆகியோரும் உடன் வந்து உள்ளனர்.

அப்போது, வீட்டில் இருந்த அந்த சிறுமியின் தாயார், தனது மகளிடம் “3 பேருக்கும் டீ போடு” என்று சொல்லி இருக்கிறார். 

அதன்படி, அந்த சிறுமி டீ போடுவதற்கு, சிச்சனுக்கு சென்ற நிலையில், அந்த சிறுமியின் தாயார் அந்த 3 பேரையும் தனது மகள் இருக்கும் இருக்கும் நிலையில், வீட்டின் வெளியே சென்று, வெளி பக்கமாக கதவை பூட்டி விட்டு, அங்கிருந்து சென்று உள்ளார்.

அப்போது, அந்த  சிறுமி சென்று டீ போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அந்த 3 பேரும் அந்த வீட்டின் கதவை உட்பக்கமாக தாப்பாள் போட்டு, அந்த சிறுமியின் அருகில் சென்று உள்ளனர். 

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, அங்கிருந்து தப்பி நினைத்த நிலையில், அந்த 3 பேரும் அந்த சிறுமியை மடக்கப் பிடித்து அந்த சிறுமியை தொட்டு சில்மிஷம் செய்திருக்கிறார்கள். 

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக மடக்கி 3 பேருமாக சேர்ந்து அந்த சிறுமியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனையடுத்து, அந்த 3 பேரும் அங்கிருந்து சென்று உள்ளனர்.

அப்போது தான், “தனது தாயே, இந்த 3 பேரிடம் தன்னை சிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்து” அந்த சிறுமிக்கு தெரிய வந்திருக்கிறது. தாயாரின் இந்த செயலை நினைத்து உள்ளுக்குள் அழுது புலம்பிய அந்த சிறுமி, தனக்கு ஏற்பட்ட இந்த பாலியல் கொடுமை பற்றியும், இதற்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்தது பற்றியும், தனது உறவினர்களிடம் கூறி அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்ய முயன்ற போது, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி உள்ளனர். இதனால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment