வடிவேலு காமெடி போல்.. 2 வது கணவனையும் விட்டு 3 வது காதலனும் சென்ற பெண்! கண்டுப்பிடித்து சேர்த்து வைக்க சொன்ன 2 கணவர்கள்!

வடிவேலு காமெடி போல்.. 2 வது கணவனையும் விட்டு 3 வது காதலனும் சென்ற பெண்! கண்டுப்பிடித்து சேர்த்து வைக்க சொன்ன 2 கணவர்கள்! - Daily news

வடிவேலு பட காமெடி போல், “2 வது கணவனையும் விட்டு விட்டு, 3 வதாக ஒரு காதலனும் சென்ற பெண்ணை, கண்டுபிடித்துச் சேர்த்து வைக்கக் கோரி” அவரது இரு கணவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் தான், வடிவேலு காமெடி போல் நிஜத்தில் நடந்திருக்கிறது.

“மருதமலை” படத்தில் வரும், காவல் நிலைய காட்சியில் ஒரு பெண்ணுக்காக, 4 ஆண்கள் வந்து “எனது மனைவியை என்னுடன் அனுப்புங்கள்” என்பது போல் வடிவேலுவிடம் கேட்டு அடம் பிடிப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அதே மாதிரியான ஒரு சம்பவம் தான் தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்திருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பரோஷா காவல் நிலையத்தில் 2 அப்பாவி கணவர்கள் வந்து ஒரு புகாரை அளித்து உள்ளனர். இந்த புகாரை வாங்கி பார்த்த அந்த காவல் நிலைய போலீசார், அப்படியே அதிர்ச்சியடைந்த அந்த அப்பாவியான இரு ஆண்களையும் பார்த்து, “என்ன சொல்வது என்றே தெரியாமல்” திகைத்துப் போய் நின்று உள்ளனர்.

அந்த புகார் மனுவில், “எங்களது மனைவியை கண்டுபிடித்து, எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்ற, ஒரே கோரிக்கையை அந்த இரு அப்பாவி ஆண்களும் மனுவாக போலீசாரிடம் அளித்து உள்ளனர்.

இது குறித்து என்ன நடந்தது என்று போலீசார் அவர்களிடம் விசாரித்த நிலையில், அதாவது, நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை, இந்த அப்பாவி கணவரில் ஒருவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 

இதனையடுத்து, இவர்களுக்கு இரு பிள்ளைகள் பிறந்தது. இப்படியாக, 4 ஆண்டுகள் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பெண், தற்போது கூட வந்துள்ள மற்றொரு அப்பாவி கணவனை 2 வதாக திருமணம் செய்துகொண்டு, வாழ்ந்து வந்திருக்கிறார். இவருடன் சுகபோகமாக அந்த பெண் வாழ்ந்து வந்த நிலையில், எந்நேரமும் சமூக வலைத்தளத்தில் அடிமையாகி, அதிலேயே எந்நேரமும் மூழ்கிக் கிடந்து உள்ளார்.

இப்படியான சூழலில் தான், சமூக வலைத்தளம் மூலமாக ஒரு இளைஞர் இந்த பெண்ணுக்கு அறிமுகம் ஆன நிலையில், அவருடன் இந்த பெண் தினமும் அதிக நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதனால், அந்த இளைஞனுடன் இந்த பெண்ணுக்கு நெருக்கம் அதிகரித்த நிலையில், தனது இரு கணவர்களையும் மறந்து, 3 வதாக அந்த ஆன்லைன் காதலன் உடன் இந்த இரு கணவர்களின் மனைவி சென்று உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இரு அப்பாவி கணவர்களும் ஒன்று சேர்ந்து, “எங்களது மனைவியை கண்டுபிடித்து எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்று, புகார் அளித்து உள்ளனர்.

இது குறித்து வழக்கின் விபரங்களைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற போலீசார், வேறு என்ன செய்வது என்று தெரியாமல், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, 2 கணவர்களை விட்டு 3 வதாக ஆன்லைன் காதலனுடன் சென்ற அந்த பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், நாக்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், இணையத்தில் இந்த செய்தி, பெரும் வைரலாகி வருகிறது.

Leave a Comment