ஹோம் ஒர்க் செய்யாத 5 வயது குழந்தை..  கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் கொடுமைப்படுத்திய கொடூர தாய்!

ஹோம் ஒர்க் செய்யாத 5 வயது குழந்தை..  கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் கொடுமைப்படுத்திய கொடூர தாய்! - Daily news

ஹோம் ஒர்க் செய்யாத 5 வயதான பெற்ற மகளின் கை, கால்களை கட்டி, பெற்ற தாயே உச்சி வெயிலில் நிற்க வைத்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியாவில் நடப்பாண்டு கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும் நிலையில், அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும், அதே வெயினின் தாக்கம் நீடிப்பதால், வீட்டை விட்டு வெளியே வரும் பொது மக்கள் வெகுவாகவே அதன் தாக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதுவும், இந்த வெயிலானது, தலைநகர் டெல்லியில் இன்னும் அதிகமாக இருக்கிறது என்றும், இதனால் டெல்லி மக்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அங்கு வெயிலின் தாக்கம் நெருப்பாக கொதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தான், இந்த வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு கொளுத்தும் இந்த வெயிலில், ஒரு 5 வயது குழந்தையின் கை, கால்களை கட்டிப்போட்ட பெற்ற தாய் ஒருவர், நண்பகல் 2 மணி அளவில் மொட்டை மாடியில் படுக்க வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

இதனால், உடம்பை வெயில் சுட்டெறித்த நிலையில், கதறித் துடித்த அந்த 5 வயது குழந்தையை அங்குள்ள அக்கம் பக்கத்தினர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோவானது, சுமார் 25 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கிறது.

அந்த வீடியோவில், அந்த 5 வயது பச்சிளம் குழந்தை அழுது கதறி துடிப்பது, மனதை கலங்கடித்து உள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், பலருக்கும் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது. இதனையடுத்து, இந்த வீடியோப் பார்த்த பலரும், குறிப்பிட்ட அந்த தாய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, டெல்லி காவல் நிலையத்தில் இணையம் மூலமாக புகார் அளித்தனர்.

இதனையடுத்து, போலீசார் இது குறித்து நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹசுரி ஹாஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது முதலில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்த விசாரணையை மேலும் துரதப்படுத்திய போலீசார், “அந்த 5 வயது குழந்தை, வீட்டுப் பாடம் செய்யாத காரணத்தால், அந்த குழந்தையின் பெற்ற தாயே, இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டது தெரிய வந்திருக்கிறது.

இதனால், இந்த கொடூர சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார், சம்மந்தப்பட்ட குழந்தையின் குடும்பத்தினரை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அத்துடன், 5 வயது குழந்தையை கடுமையாக துன்புறுத்திய பெற்ற தாய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, டெல்லி போலீசார் உறுதி அளித்தனர்.

தற்போது, சம்மந்தப்பட்ட அந்த வீட்டை கண்டுப்பிடித்த போலீசார், நேராக அந்த வீட்டிற்கே சென்று அந்த குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். “அந்த பெண்ணிற்கு மனதளவில் எதுவும் பிரச்சனை உள்ளதா?” என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, “இந்த வீட்டில் எப்போதும் குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்” என்று, அக்கம் பக்கத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment