தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படங்களை இயக்கவுள்ளதாக தற்போதே சில பெயர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.இதில் மாஸ்டர்,விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு தளபதி 67 படத்தினை அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மாஸ்டர் படத்தின் மிக பெரிய வெற்றியை அடுத்து இருவரும் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து நேற்று ட்விட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் லோகேஷ்.

அதில் ரசிகர் ஒருவர் அடுத்த பட அறிவிப்பு எப்போது என கேட்க மிக விரைவில் நண்பா என லோகேஷ் பதிலளித்துள்ளார்,இதன்மூலம் இது விஜய் படம் தான் என ஹிண்ட் கொடுத்துள்ளார்.விஜய் பிறந்தநாள் அன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.