தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாணாக்காரன். இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் நேரடியாக டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் பாயும் ஒளி நீ எனக்கு. இயக்குனர் கார்த்திக் அட்வைத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனஞ்ஜெயா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

KMH புரொடக்ஷன்ஸ் சார்பில் கார்த்திக் அட்வைத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சாகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பாயுமொளி நீ எனக்கு திரைப்படத்திலிருந்து அனிச்ச பூவே பாடல் தற்போது வெளியானது. அந்தப் பாடல் இதோ…