போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போது இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த  காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து அஜித்குமார் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் இன்று ஜூன் 9ம் தேதி சென்னையில் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னணி திரை நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்னம். அனிருத், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் இன்று காலை 8:30மணி அளவில் நடைபெற்ற நிலையில் தற்போது இவர்களது திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வரும் அந்த புகைப்படம் இதோ…