இந்திய திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நடராஜன் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் திரை உலகில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக மிளகா, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக கலக்கிய நட்டி, இந்த ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் அசத்தியிருந்தார். அடுத்ததாக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் வெப் படத்தில் நடித்து வருகிறார் .

இதனிடையே நட்டி நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் இன்ஃபினிட்டி. இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இன்ஃபினிட்டி திரைப்படத்தில் நட்டி உடன் இணைந்து வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்க, முனிஸ்காந்த், சார்லஸ் வினோத், தா முருகானந்தம்,உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மென்பணி புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இன்ஃபினிட்டி திரைப்படத்திற்கு, சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவில், பாலசுப்பிரமணியம்.G இசை அமைத்துள்ளார். இந்நிலையில் நட்பின் இன்ஃபினிட்டி தொகை படத்தின் விறுவிறுப்பான டீசர் சற்று முன்பு வெளியானது. அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.