தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வைகைபுயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். முன்னதாக லைகா  புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வைகைப்புயல்.

நாய் சேகரை அறிமுகப்படுத்திய தலைநகரம் படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து விஜய்டிவி சிவாங்கி, ரெட்டின் கிங்ஸ்லி,ஆனந்தராஜ் மற்றும் RJ விக்னேஷ் காந்த்  ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் பூஜையுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல்களுக்காக படக்குழுவினர் லண்டன் சென்றனர். இதனைத்தொடர்ந்து லண்டனிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் வைகை புயல் வடிவேலுவுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வைகைப்புயல் வடிவேலு விரைவில் குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.