தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் நடிகர் சதீஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால் என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களோடும்  இணைந்து பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கி வருகிறார்.

அடுத்ததாக கதாநாயகனாகவும் களமிறங்கும் நடிகர் சதீஷ் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நாய் சேகர் திரைப்படத்தை பிரபல நடிகரான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நாய் சேகர் திரைப்படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா கதாநாயகியாக நடிக்க நடிகர்கள் மனோபாலா & லிவிங்ஸ்டன் ஆகியோருடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ள நாய் சேகர் படத்திற்கு அஜீஷ் இசை அமைத்துள்ளார்.

முன்னதாக ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் எடக்கு மடக்கு எனும் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளிவந்த நாய் சேகர் படத்தின் டீசரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் நாய் சேகர் திரைப்படத்தின் 2வது பாடலாக லொள் லொள் அரசன் பாடல் தற்போது வெளியானது. கலகலப்பான அந்த பாடல் இதோ…