ட்விட்டரில் மாஸான சாதனையை படைத்த மகேஷ் பாபு !
By Aravind Selvam | Galatta | December 22, 2020 15:08 PM IST
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.கொரோனா காரணமாக வீட்டிலேயே இருப்பதால் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.மகேஷ்பாபுவும் தனது மகள் மற்றும் மகனுடன் விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.
ட்விட்டரில் 10 மில்லியன் ரசிகர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சில மாதங்களுக்கு முன் பெற்றிருந்தார் மகேஷ் பாபு.இவர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றிருந்தது மிகவும் வைரலாக இருந்தது.மேலும் 2020 ட்விட்டர் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட சினிமா பிரபலங்கள் வரிசையில் மகேஷ் பாபு இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது மகேஷ் பாபு 11 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Thalapathy Vijay's Master New Still released - surprise treat for fans!
21/12/2020 06:09 PM
Master director Lokesh Kanagaraj's latest statement goes viral - check out!
21/12/2020 05:32 PM
Sufiyum Sujatayum director Naranipuzha Shanavas In ICU after a cardiogenic shock
21/12/2020 04:47 PM