jகடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மகான்,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த மூன்று படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் நிறைவு செய்தார் சீயான் விக்ரம்.மகான் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார்

இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இந்த படத்தின் அடுத்த பாடலான ரிச் ரிச் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரகளையான இந்த பாடல் ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்