படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விடுதலை படத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி. தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் மாமனிதன் மற்றும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் உள்ளிட்ட படங்களும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

 தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் மலையாளத்தில் 19(1)(a), ஹிந்தியில் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் புதிய ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் காந்தி என்ற மௌன படமும் விரைவில் வெளிவர உள்ளன. முன்னதாக காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் நீண்ட காத்திருப்புக்கு பிறகு வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள கடைசி விவசாயி படத்தில் நல்லாண்டி & விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி இணைந்து இசை அமைத்துள்ள கடைசி விவசாயி படத்தை இயக்குனர் மணிகண்டன் ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்நிலையில் கடைசி விவசாயி படத்தின் கலக்கலான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது அந்த ப்ரோமோ வீடியோ இதோ...