தமிழ் சினிமாவில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீட் செய்துகொள்வது கேசுவலான விஷயம் தான்.என்றாலும் சில இயக்குனர்களின் சந்திப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் அப்படி ஒரு முக்கிய சந்திப்பு தான் தற்போது நடந்துள்ளது.

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை இன்று காலை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் தான் இன்றைய ட்ரெண்டிங்கில் உள்ளது.இவர் பிரபல இயக்குனர்களான அட்லீ மற்றும் நெல்சன் திலீப்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர்களின் சந்திப்பு இதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்டால்,இவர்கள் மூவரும் தளபதி விஜயின் கடந்த சில படங்களின் இயக்குனர்களாக இருந்துள்ளனர்.நெல்சன் அடுத்து வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தினை இயக்கியுள்ளார்,லோகேஷ் மாஸ்டர் படத்தினை மேலும் ஒரு படத்தில் விஜயுடன் இணைகிறார் என்ற தகவலும் உள்ளது.அதேபோல அட்லீ ஏற்கனவே தெறி,மெர்சல்,பிகில் படங்களை தொடர்நது மேலும் ஒரு படத்தில் இணையவுள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது.

இந்த புகைப்படம் குறித்த மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய்.விஜயுடன் இவர்கள் மூவரும் மீட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இது வெறும் சாதாரண மீட்டிங் தானா இல்லை தளபதி விஜயுடன் அடுத்தடுத்த படங்கள் குறித்த சந்திப்பாக இருக்குமா என்று ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.