மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ப்ரோ டாடி. நடிகர் ப்ரித்திவிராஜ் இயக்கி நடித்த ப்ரோ டாடி திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனை அடுத்து முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் மோகன்லால் பர்ரோஸ் கார்டியன் ஆஃப் ட'காமா'ஸ் ட்ரெஷர் எனும் ஃபேண்டசி அட்வென்சர் திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். அடுத்ததாக மீண்டும் த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் உடன் இணைந்து ராம் திரைப்படத்தில் நடித்து வரும் மோகன்லால் நடிப்பில் மான்ஸ்டர், அலோன் மற்றும் 12th MAN ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மோகன்லால் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ஆராட்டு. உதயகிருஷ்ணா எழுத்தில், உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ள ஆராட்டு திரைப்படத்தை RD இல்லுமினேஷன் மற்றும் MGM குரூப் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் உலகநாத் ஒளிப்பதிவில், சமீர் முகமது படத்தொகுப்பு செய்துள்ள ஆராட்டு படத்திற்கு ராகுல் ராஜ் இசை அமைத்துள்ளார்

ஆராட்டு படத்தில் மோகன்லாலுடன் இணைந்து விஜயராகவன், சாய்குமார், சித்தீக், ரியாஸ்கான், ஜானி ஆண்டனி, ஷ்ரத்தா சீனிவாஸ்,ரச்சனா நாராயணன் குட்டி, ஸ்வஸ்திகா, மாளவிகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கே ஜி எஃப் பட நடிகர் கருடா ராம் மிரட்டலான  வில்லனாக நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆராட்டு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. நடிகர் மோகன்லாலின் அதிரடியான ஆராட்டு பட ட்ரைலர் இதோ…