பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளர் இவர்தான்! வைரல் ப்ரோமோ
By Anand S | Galatta | January 24, 2022 19:03 PM IST
விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி எப்போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை வீணடிப்பதில்லை. அந்தவகையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியும் மக்களின் பேராதரவோடு 106 நாட்களை கடந்து வெற்றிகரமாக நிறைவடைந்தது. பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் படியே ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார்.
இதனையடுத்து பிக்பாஸ் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாக அறிவிக்கப்பட்டது பிக்பாஸ் அல்டிமேட். வழக்கமாக தினமும் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் இனி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.வருகிற ஜனவரி 30-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மீண்டும் இதில் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டுமே காண முடியும். வருகிற ஜனவரி 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரை சென்ற கவிஞர் சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் புதிய ப்ரோமோ தற்போது வெளியானது. அந்தப் புரோமோ இதோ…