ரெஸ்டாரண்ட் ஒன்றில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் என்ற இளைஞர், சென்னையில் உள்ள தனியார் கல்லூியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு குறும்படங்களை இயக்கி வந்தார்.

இந்த சூழலில் தான், நேற்று பெரம்பூர் பிபி சாலையில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது மருந்தகத்திற்கு சென்று உள்ளார். 

அங்கிருந்து தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள பிரபல தனியார் சிக்கன் ரெஸ்டாரண்டில், அவர்கள் சிக்கன் ஆர்டர் செய்து உள்ளனர்.

அதன் படியே, அடுத்த சில நிமிடங்களில் சிக்கன் வந்து உள்ளது. அதனைப் பெற்றுக்கொண்ட ரஞ்சித், தனது நண்பர்களுடன் அந்த மெடிக்கல் கடையில் அமர்ந்துக்கொண்டு, அந்த சிக்கனை சாப்பிட்டு உள்ளனர்.

இதனையடுத்து, நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று உள்ளனர். அதன்படி, தனது வீட்டிற்குச் சென்ற ரஞ்சித், நேற்று இரவு 10 மணி அளவில் “எனக்கு இடது பக்க உடல் முழுவதும் வலிக்கிறது” எனறு, தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறி இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, ரஞ்சித் தனது வீட்டிலேயே வாந்தியும் எடுத்து உள்ளார். 

இதனால், பயந்து போன ரஞ்சித்தின் பெற்றோர், உடனடியாக தனது மகனை அழைத்துக் கொண்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரஞ்சித்திற்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த சில நிமிடங்களில் ரஞ்சித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், “இவர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக” கூறியுள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், கதறி அழுத நிலையில் இது தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “சிக்கன் சாப்பிட்ட 4 பேரில் ரஞ்சித் மட்டுமே உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால், மற்ற 3 பேரும் நலமாக உள்ளனர் என்றும், இதனால் சிக்கனில் ஏதும் பிரச்னையா, அல்லது ரஞ்சித்திற்கு வேறு ஏதும் உடல் நலனில் பாதிப்பா?” என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி  வருகின்றனர்.

அதன்படி, சிக்கின் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் ரஞ்சித்தின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். 

இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே, “ரஞ்சித் எப்படி இறந்தார்? என்பது குறித்து முடிவுக்கு வர முடியும்” என்றும், வியாசர்பாடி போலீசார் தெரிவித்து உள்ளனர். இச்சம்வம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.