கடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மகான்,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த மூன்று படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் நிறைவு செய்தார் சீயான் விக்ரம்.மகான் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார்

இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் பர்ஸ்ட்லுக்,மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் OTT-யில் வெளியாகும் என்ற சில தகவல்கள் பரவி வந்தன.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு முக்கிய தகவலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.படம் தீரயரங்குகளில் வெளியாகவில்லை என்ற சிறிய சோகம் சீயான் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் படம் மனம்கவர்ந்த நாயகனின் படத்தினை OTT -யில் கொண்டாட தயாராகி வருகின்றனர்.