கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை விரட்டுவதற்காக, பாஜகவைச் சேர்ந்த அமைச்சரின் மகன், துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் இருக்கும் ஹர்டியா கிராமத்தில், பாஜகவை சேர்ந்த அந்த மாநில அமைச்சர் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது.

அந்த நிலத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். 

இதனைப் பார்துத கடும் ஆத்திரம் அடைந்த பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமார், அந்த சிறுவர்களை கடுமையான சொற்காளல் பேசி வசைப்பாடி உள்ளார். 

அப்போது, பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமார், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை பயமுறுத்துவதற்காக, பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமார், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு உள்ளார். அத்துடன், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களை, அந்த பாஜக அமைச்சரின் மகன் பப்லு குமார் மிக கடுமையாக தாக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அத்துடன், பாஜக அமைச்சரின் மகன் துப்பாக்கியால் சுடும் சம்பத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும் போது, “உள்ளூரைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர் என்றும், அப்போது அங்கு திடீரென்று பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமார் உள்ளிட்ட 4, 5 பேர் வந்து, அந்த சிறுவர்களை சரமாரியக அடிக்கத் தொடங்கினர்” என்றும், கூறியுள்ளனர்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வெளியான வீடியோவில், பாஜக அமைச்சரின் மகனை கிராம மக்கள் சிலர் சேர்ந்து தாக்குவது பதிவாகி இருந்தது.

இவற்றுடன், ஊர் மக்கள் சேர்ந்து பாஜக அமைச்சர் மகனுடன் வந்திருந்த மற்றவர்களையும் சேர்ந்து தாக்கி உள்ளதும், அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

இந்த சம்பத்தால், கடும் கோபம் அடைந்த அந்த ஊர் மக்கள் பலரும் திரண்டுச் சென்று பாஜக அமைச்சரின் வீட்டிற்குச் சென்று, அவரது வீட்டில் இருந்த காரை அடித்து நொறுக்கினர். 

அத்துடன், பாஜக அமைச்சரின் மகன் பப்லுவையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இது குறித்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், களத்தில் இறங்கி அங்கிருந்த நிலைமையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் பற்றிய பேசிய பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத், “எனது நிலத்தை அபகரிக்க கிராம மக்கள் முயல்வதாக” குற்றம்சாட்டினார்.

“ஊர் மக்கள் பலரும் சேர்ந்து எனது குடும்பத்தினரை தாக்கினர் என்றும். அதை தடுப்பதற்காகவே, எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றார் என்றும், அவரையும் பொது மக்கள் கற்களால் தாக்கினர் என்றும், எனது வாகனத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்” என்றும், அவர் பகிரங்கமாக ஊர் மக்கள் மீதே குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில், பாஜக அமைச்சரின் மகன் துப்பாக்கியால் சுட்ட இந்த சம்பவத்துக்கு, எதிர்கட்சியான ராஷ்திரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சக்தி சிங் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

குறிப்பாக, “பீகாரில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை என்றும், சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறுகின்றனர் என்றும், கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை தாக்க பாஜக அமைச்சரின் மகனுக்கு துப்பாக்கி சு யார் உரிமை தந்தது?” என்று, பல்வேறு தரப்பினரும் கேள்வி உள்ளனர்.

மேலும், “சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறும் போது, அந்த மாநிலத்தில் யார் சட்டத்தை அமல்படுத்துவார்கள்?” என்கிற கேள்வி எழுந்து உள்ளது.

மிக முக்கியமாக, “ஆட்சியின் அதிகாரத்தில் இருப்பவர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு, பீகாரின் நடைபெற்ற இந்த சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது” என்று, மிக கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் எழுந்து உள்ளன.