குறி தவறி பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு, சாலையில் நடந்து சென்ற 8 வயது சிறுமியின் தலையில் பாய்ந்ததில், சுருண்டு விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவில் தான் இப்படி ஒரு துயரச் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வரும் அங்குள்ள மெடிக்கல் செக்கிங் அலுவலகம் எதிரே, அந்த பகுதியைச் சேர்ந்த 8 வயது பள்ளி மாணவி ஒருவர், அந்த வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அந்த சிறுமி உடன், அவரது பாதுகாவலரும் உடன் சென்றுக்கொண்டு இருந்தார். இப்படியாக, அந்த சிறுமி, தனது பாதுகாவலருடன், மிகவும் பாதுகாப்பான முறையில் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அந்த சாலையோரம் இருக்கும் ஒரு கடையில் ஏதோ தகராறு ஒன்று நடந்து உள்ளது.

அப்போது, அந்த கடையில் இருந்து ஒரு இளைஞன், சத்தம் போட்டுக் கொண்டே வெளியே ஓடி வந்து உள்ளார்.

அந்த நேரம் பார்த்து அவரை யாரோ திடீரென துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். ஆனால், அந்த நபர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அதே நேரத்தில் துப்பாக்கியால் சுட்டவரின் துப்பாக்கி குறியானது, சண்டைப் போட்டுவிட்டு கடையின் வெளியே ஓடி வந்த குறிப்பிட்ட அந்த இளைஞர் மீது படாமல், அந்த வழியாக சாலையில் நடந்துச் சென்று கொண்டிருந்த அந்த 8 வயது சிறுமியின் தலையில் எதிர்பாராத விதமாக பாய்ந்து உள்ளது.

இதில், அந்த 8 வயது சிறுமி அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். 

இதனைப் பார்த்த அங்கிருந்து பாதுகாப்பு போலீசார், பதறிப்போய் ஓடிச் சென்று அந்த சிறுமி மீட்டனர். அத்துடன், உடனடியாக ஆம்புலன்ஸில் வரவரைக்கப்பட்டு, அந்து 8 வயது சிறுமியை மீட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனாலும், அந்த சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டிய நடத்திய மர்ம நபர் உடடினாயக அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

இதனால், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமெரிக்க போலீசார், துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும், துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் இதுவரை கைது செய்யப்படவி்லலை என்றும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அந்த மர்ம நபரை அமெரிக்க போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த 8 வயது சிறுமியின் பெயர் மெலிசா என்றும், அவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

8 வயது சிறுமி மெலிசாவி துப்பாக்கி குண்டுக்கு எதிர்பாரத விதமாக பலியான சம்பவம், அமெரிக்காவையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க உயர் போலீசார் அதிகாரிகள் துக்கத்துடன், தங்களது டிவிட்டர் பதிவில் அவர்களது சோகத்தை பகிர்ந்துகொண்டு உள்ளனர். அத்துடன், அந்த பகுதியில் பாதுகாப்பு முன்பை விட தற்போது இன்னும் பலப்படுத்துப்பட்டு உள்ளதாகவும் போலீசாரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.