தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இந்திய திரை உலகின் மிகப்பெரிய ஆளுமையாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் தனது திரைப்பயணத்தில் 60 ஆண்டுகளை கடந்து இன்றும் அதே துடிப்போடு ரசிகர்களின் ரசனையை உயர்த்தும் நோக்கில் சிறந்த கலைப்படைப்புகளாக தனது திரைப்படங்களை வழங்கி வருகிறார்.

அந்தவகையில் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தில் உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், ரமேஷ் திலக், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ், மேகா ஆகாஷ், ஆடுகளம் முருகதாஸ், ஷிவாணி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய ஃபிலொமின்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகிவரும் விக்ரம் படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக தொடர்ந்து முழுவீச்சில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதி அவர்கள் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் மற்றும் சந்தான பாரதி மூவரும் இணைந்து இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…