திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டும் அல்லாது சீரான நடிகராகவும் உருவெடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமான ட்ராப்சிட்டி படத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் சூரரைப் போற்று ஆல்பம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், இசையமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்த லாக்டவுனில் சர்வதேச போதை ஒழிப்பு நாளில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ராஜிவ் மேனன் இயக்கி ஒளிப்பதிவு செய்த இந்த பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடியிருந்தார். 

அதிக இளைஞர்களை ரசிகர்களாக கொண்டுள்ள ஜிவி பிரகாஷ், தற்போது ராஜபாளையம் நாய்களின் அருமையை பிரதிபலிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிஸ்டர் ஹாப்பி என்ற செல்ல பிராணியுடன் விளையாடுகிறார். அதுவும் ஜிவி பிரகாஷ் சொல்வதை கேட்டு விளையாடுகிறது. 

இதில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ பேசியுள்ளார். இவர் தற்போது க.பெ. ரணசிங்கம் படத்தில் நடித்துள்ளார். இந்த குறும்படத்தில் தினேஷ் குணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் எடிட்டிங் செய்துள்ளார். செல்லப்பிராணியின் அருமையை உணர்த்தும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.