கேரளாவில் கொடூரத்தின் உச்சமாக 8 ஆம் வகுப்பு படிக்கும் மகளை, நண்பர்களுடன் சேர்ந்து தந்தையே பாலத்காரம் செய்த பாலியல் பலாத்கார சம்பவத்தில், அவரின் தாயே உடந்தையாக இருந்தது நெஞ்சை நடு நடுங்க செய்துள்ளது.

கேரளா மாநிலம் கர்நாடக எல்லையில் உள்ள காசர்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட நீலேசுவரம் பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

நீலேசுவரம் பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இதனிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ள நிலையில், சிறுமியும் தன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன் மகளிடமே எதையோ பார்த்து காம வயப்பட்டு சஞ்சலமடைந்த சிறுமியின் தந்தை, தன் மகள் என்றும் பார்க்காமல், அவள் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி என்றும் பார்க்காமல், அவளை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

போதைக்கு அடிமையான அந்த சிறுமியின் தந்தை, மேலும் தனது நண்பர்களின் காம பசிக்கும், தன் சொந்த மகளை இரையாக்கி உள்ளார். இந்த காம வேட்டையில், சிறுமியின் தந்தையும் உடந்தை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த தாய், தன் கணவனிடம் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக, மனைவியே உடந்தையாக இருப்பதால், அந்த நபர் தன் மகளைப் பல மாதங்களாக மிரட்டியே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில், ஒரு சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவரது பெற்றோர், தன் சிறுமி காதலை நம்பி ஏமார்ந்து விட்டதாகப் பொய் சொல்லி, அங்குள்ள மருத்துவமனையில் கரு கலைப்பு செய்துள்ளனர்.

சிறுமிக்கு வீட்டில் நடக்கும் கொடூரத்தை உணர்ந்த சிறுமியின் தாய் மாமன், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை கடந்த பல மாதங்களாக அவரது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும், அவர் தன் நண்பர்களுக்கும் மகளை இரையாக்கியதும், இந்த ஒட்டுமொத்த தவற்றுக்கும் அவரின் தாயாரே உடந்தை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த கேரளா போலீசார், சிறுமிக்கு பாலியல் தந்தை கொடுத்த அவரது தாய் - தந்தை உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அத்துடன், சிறுமியை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாகத் தங்க வைத்துள்ளனர்.

மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, சிறுமி தந்தையின் நண்பர்கள் சிலரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று, கேரளாவில் தற்போது கடும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, 8 ஆம் வகுப்பு படிக்கும் மகளை, தாயாருக்குத் தெரிந்த நண்பர்களுடன் சேர்ந்து தந்தையே பாலியல் பாலத்காரம் செய்த கொடூர சம்பவம், கேரளாவில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.