சினிமாவில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தப் படத்தின் படபிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைஃப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், பேஷனுக்காக பிடித்தவற்றில் ஆர்வம் காட்டி அசத்தி வருகிறார். கடந்த வருடம் சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் (AERONAUTICAL) டிபார்ட்மென்டுக்கு சென்று அங்கு மாணவர்களை சந்தித்தார். 

பின்னர் இவரும் அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த Medical Express 2018 UAV Challenge போட்டியில் கலந்துகொண்ட தக்‌ஷா குழு சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது. 

அதன் பின் ஜெர்மனி சென்று, அங்கு வாரியோ (vario) ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கொரோனா ஊரடங்கில் கூட அஜித் ஆலோசனை செய்த தக்ஷா குழு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு அசத்தி வருகிறது. சமீபத்தில் மங்காத்தா படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்றை நடிகர் அஸ்வின் பகிர்ந்தார். அதில் அஜித் ட்ரோன்களை இயக்கியது பெரிதளவில் வைரலானது. 

இந்நிலையில் தல ரசிகர்கள், அஜித் ஏரோ மாடலிங் செய்து அசத்திய வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோவின் கீழ் வலிமை அப்டேட் ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். அஜித் சோஷியல் மீடியாக்களில் இல்லையென்றாலும், அவர் குறித்த ஏதாவது ஒரு செய்தியை வைரலாக்கி வருகின்றனர். 

பிரபல நாளிதழுக்கு பேசிய போனி கபூர், வலிமை படத்தை திரையரங்கில் தான் ரிலீஸ் செய்வதாக உறுதியாக கூறியிருந்தார். படப்பிடிப்பை துவங்க நேரமானாலும், இயல்பு நிலை திரும்பியவுடன், நிச்சயம் தியேட்டர் ரிலீஸ் தான் என்ற ருசிகர செய்தியை அவர் கூறியிருந்தார்.