மதுரை அருகே மனைவியின் கள்ளக் காதலால் அவமானம் அடைந்த கணவன், தன்னுடைய 2 மகன்களையும் கொன்று, தற்கொலைக்கு முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த குமார் - உஷாராணி தம்பதிக்கு 8 வயதில் கோப்பெருஞ்சோழன் என்ற மகனும், 6 வயதில் சித்தார்த்தன் என்ற 
மகனும் உள்ளனர்.

இதனிடையே, குமார், ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், இவரது மனைவி உஷாராணி அங்குள்ள பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

உஷாராணி வேலைபார்க்கும் பாலமேடு பேரூராட்சியில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றும் 45 வயது கனகராஜுக்கும், உஷாராணிக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் உஷாராணியின் கணவர் குமாருக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர், இது குறித்து மனைவி உஷாராணியிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாகக் கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில், தனது மனைவி உஷாராணியை குமார் எச்சரித்துள்ளார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாத உஷாராணி, கணவரின் கண்டிப்பையும் மீறி கள்ளத் தொடர்பில் அந்த உல்லாச வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால், இன்னம் அதிர்ச்சியடைந்த குமார், கனகராஜை அழைத்துக் கண்டித்துள்ளார். அப்போதும், இருவரும் பிரிந்து செல்லாமல் தங்களது கள்ளக் காதலைத் தொடர்ந்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த குமார், கனகராஜை கொலை செய்யத் திட்டமிட்டார்.

ஆனால், அதற்கான நேரம் அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான குமார், தனது திருமண ஆல்பத்தில் உள்ள மனைவியின் முகத்தைக் கத்தியால் கிழித்தும், கிறுக்கியும் சற்று ஆறுதல் அடைந்து வந்தார்.

ஒரு கட்டத்தில், வீட்டில் உள்ள அரிவாளை எடுத்துக்கொண்டு, கனகராஜை தேடி அவரது அலுவலகத்திற்கே சென்றுள்ளார். அங்கு, மனைவியின் கள்ளக்காதலன் 

கனகராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் கனகராஜை கையால் தடுக்கவே, அந்த அரிவாள் கனகராஜின் தலையில் விழுந்துள்ளது. இதனையடுத்து. அவர் சத்தம் போட்டு அலறித்துடிக்கவே, குமார் அங்கிருந்து ஓடி உள்ளார். இதனையடுத்து, அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கனகராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குமாரை தேடி வந்தனர். ஆனால், குமார் தனது 2 மகன்களுடன் தலைமறைவானார். அதன் பிறகு, குமார் மன உளைச்சலின் உச்சிக்கே சென்றுள்ளார். 
 
இதனையடுத்து, பாலமேட்டில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளையம் பட்டி பெரிய குளம் மாடக் கருப்பு கோயிலில் குமார், மற்றும் அவரது இரு மகன்களுடன் குருணை மருந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளனர். 

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், 3 பேரையும் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறுவன் சித்தார்த் அப்போது உயிரிழந்துள்ளான். இதனையடுத்து. மற்ற இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மூத்த மகன் கோப்பெருஞ்சோழனும் உயிரிழந்தார். இதனால், குமார் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, உஷாராணியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மனைவியின் கள்ளக் காதலால் 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை முயன்ற சம்பவம், மதுரை பாலமேட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.