தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட்டான இயக்குனராக திகழ்பவர்  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். முன்னதாக சூப்பர் ஹிட்டான  விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து 3-வது முறையாக  கௌதம் வாசுதேவ் மேனன் ரஹ்மான் சிலம்பரசன் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தணிந்தது காடு.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தற்போது தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் கடைசியாக ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்து வெளிவந்த செல்ஃபி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் K.விவேக் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படமான "13" படத்தில் GV-GVM மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் ஆத்யா பிரசாத், பாவ்யா ட்ரிக்கா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் "13" திரைப்படத்தை அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் இணைந்து வழங்குகிறது.

மூவேந்தர் ஒளிப்பதிவில் JS.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்யும் 13 திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் 13 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள 13 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…