எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,காயத்ரி,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா,ஸ்ரீகுமார்கணேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே கமல்,விஜய்சேதுபதி,பஹத் என பெரும் நடிகர்கள் இருக்கையில் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை உச்சம் தொடவைத்துள்ளது.இதுகுறித்து இயக்குனரும் லோகேஷின் நண்பருமான ரத்னகுமார் ஒரு சுவாரசிய தகவலை கலாட்டாவுடனான நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

சூர்யா போன்ற ஒரு நடிகர் வந்தது அந்த கதாபாத்திரத்தை இன்னும் ஸ்பெஷல் ஆக்கியுள்ளது,அந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அதனை தாண்டி தனது நடிப்பால் ஸ்கோர் செய்வார்.சூர்யா வரும் காட்சி திரையரங்குகளில் நிச்சயம் பெரிதாக கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.