மக்களின் நம்பத்தக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பது நமது கலாட்டா நிறுவனம்.செய்திகள் மட்டுமின்றி பலருக்கும் அவர்களது திறமையை பாராட்டி அவ்வப்போது விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறோம்.அந்த வகையில் இந்த வருடம் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு மிக பிரம்மாண்டமாக திரைத்துறையினரை கௌரவிக்கும் படி The Galatta Crown 2022 விருது விழா மே 8ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

திரைத்துறையில் சாதித்த பல அறிமுக கலைஞர்களுக்கும் பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் கௌரவித்து கலாட்டா பெருமை படுத்தியது.மேலும் சில அரசியல் சார்ந்த விருதுகள் மற்றும் திரைத்துறையினர் பங்கேற்ற உரையாடல் என பல அம்சங்கள் அடங்கிய மாபெரும் நிகழ்வாக இந்த விருது விழா நேற்று நடைபெற்றது.பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் The Galatta Crown 2022வில் முக்கிய விருந்தினராக பங்கேற்றார்.

இவரை தவிர சிவகார்த்திகேயன்,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,க்ரிதி ஷெட்டி,பிரியங்கா மோகன்,கல்யாணி ப்ரியதர்ஷன்,அருண் விஜய்,யோகி பாபு,வெங்கட் பிரபு,விக்னேஷ் சிவன்,அனிருத்,ஜீ வி பிரகாஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த இந்த நிகழ்வின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக ரசிகர்களின் பார்வைக்கு வரவுள்ளது , அவற்றை நமது கலாட்டா யூடியூப் சேனலில் வெகு விரைவில் கண்டு மகிழலாம்.

இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.பல வருடங்களாக நம்மை தனது நடிப்பால் அசரவைத்து கொண்டிருக்கும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு Empress of Indian Cinema என்ற விருதினை பெற்றார் நயன்தாரா,வருங்கால நடிகைகளுக்கு சில அட்வைஸ் மற்றும் ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார் நயன்தாரா.

தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கலந்துகொண்டார் நயன்தாரா.இருவருக்கும் வெகு விரைவில் திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.நமது பிரம்மாண்ட விழாவில் இவர்கள் திருமணம் குறித்த சில சுவாரசிய கேள்விகள் எழுப்பப்பட்டது.அதற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அசத்தலான பதில்களை பகிர்ந்துகொண்டனர்.அந்த பதில்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்