சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று கண்ணான கண்ணே.ராகுல் ரவி இந்த தொடரின் நாயகனாக நடித்து அசத்தி வருகிறார்.நிமேஷிகா ராதாகிருஷ்ணன் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் பப்லு ப்ரித்விராஜ்,அக்ஷிதா போபையா,மானஸ்,ப்ரியா,வினோதினி என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.இந்த தொடருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் நடித்து வரும் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக மாறியுள்ளனர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பான இந்த தொடர் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.பல அதிரடி திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடர் விரைவில் 500 எபிசோடுகளை எட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் ஸ்பெஷல் எபிசொட் ஒன்று நாளை ஒளிபரப்பாகவுள்ளது.இதில் பிக்பாஸ் மூலம் அனைவரின் கவனம் பெற்ற நடிகை சாக்ஷி அகர்வால் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.இதுகுறித்த ப்ரோமோ ஒன்றை சன் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.