மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹே சினாமிகா படம் மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் சில முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்து அசத்தியுள்ளார் துல்கர்.

அடுத்ததாக இவர் நடித்துள்ள சல்யூட் படம் நேரடியாக சோனி லைவ் தளத்தில் மார்ச் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஹே சினாமிகா படத்தினை முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான பிருந்தா இயக்கியுள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் அச்சமில்லை அச்சமில்லை பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்