இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக தயாராகி உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரித்துள்ளன.

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு, லால் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் பல மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இன்று (ஜூலை 19) சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.