தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உலக சாதனை முயற்சியாக வெளிவந்துள்ள இரவின் நிழல் படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக தயாராகி இருக்கும் இரவின் நிழல் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

முன்னதாக இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை ப்ரிகிடா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது படத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகள் குறித்து விளக்கமளித்தார், அதில் “இரவின் நிழல் திரைப்படம் ஒரு தனி மனிதனை சார்ந்த திரைப்படம். அவனது வாழ்வில் முழுக்க முழுக்க கெட்ட விஷயங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் படமாக்கப்படும் போது ராவாக தான் சொல்ல முடியும். ஒரு சேரிக்கு சென்று பார்த்தால் அங்குள்ள மக்கள் எப்படி பேசுவார்கள் என்று நமக்கே தெரியும். அங்கே இது மாதிரியான வார்த்தைகளை தானே பேசுகிறார்கள். சினிமாவிற்காக எதையுமே மாற்ற முடியாது.” என பேசியுள்ளார்.

நடிகை ப்ரிகிடாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தற்போது இதற்கு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ப்ரிகிடா, தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குனர் பார்த்திபனும் இதற்காக மன்னிப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே!” என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! https://t.co/NSq3LNaYt7

— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 17, 2022