ஜெயின் எண்ணித்துணிக பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | July 18, 2022 16:32 PM IST

தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய். கடைசியாக ஜெய் மற்றும் சுந்தர்.C இணைந்து நடித்து சைக்கோ த்ரில்லர் படமாக வெளிவந்த பட்டாம்பூச்சி திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.
முன்னதாக கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் ஜெய் மற்றும் ஜீவா இணைந்து நடித்திருக்கும் காஃபி வித் காதல் திரைப்படம் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜெய் நடிப்பில் பிரேக்கிங் நியூஸ் திரைப்படமும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரிசையில் இயக்குனர் S.K.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் எண்ணித்துணிக. ஜெயுடன் இணைந்து அதுல்யா ரவி, வித்யா பிரதீப், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் எண்ணித்துணிக திரைப்படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார்.
Rain Of Arrows தயாரிப்பில் Krikes Cine Creations வழங்கும் எண்ணித்துணிக திரைப்படத்திற்கு J.B.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் V.J.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். MSM MOVIE TRADERS வெளியீட எண்ணித்துணிக திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The power-packed #Yennithuniga Releasing worldwide In Theatres on Aug 04th!
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) July 17, 2022
TN theatrical release by MSM Movie Traders#YennithunigaFromAug4th@Actor_Jai @Krikescc @AthulyaOfficial @ianjalinair @sureshs1202 @DirVetrisk @SamCSmusic @RainofarrowsENT @dopjbdinesh @editorsabu pic.twitter.com/4SHrKtm7ee