தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிலம்பரசன்.TR 3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்துதலை திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய சிலம்பரசன்.TR தற்போது பத்துதல படப்பிடிப்பில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே சிலம்பரசன்.TR மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மஹா திரைப்படத்தில் ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மஹா திரைப்படத்தை ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் அவர்கள் தயாரித்துள்ளார்.இயக்குனர் UR.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா திரைப்படத்தின் SNEAK PEEK  வீடியோ தற்போது வெளியானது. அந்த SNEAK PEEK  வீடியோ இதோ…