தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த சரவணன் தற்போது தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். உல்லாசம் மற்றும் விசில் ஆகிய திரைப்படங்களை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து தி லெஜண்ட் படத்தை இயக்கியுள்ளனர்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும்  தி லெஜன்ட் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தி லெஜன்ட் படத்திற்கு  R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கோபுரம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் அன்புச்செழியன் அவர்கள் வெளியிட வருகிற ஜூலை 28-ம் தேதி தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக தி லெஜண்ட் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தி லெஜண்ட் திரைப்படத்திலிருந்து போ போ போ வீடியோ பாடல் வெளாயானது. கலக்கலான அந்த போ போ போ வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.