விஷால்-SJசூர்யாவின் மிரட்டலான கேங்ஸ்டர் படமாக வரும் மார்க் ஆண்டனி… கைகோர்க்கும் முன்னணி பிரபலங்கள்! ஸ்பெஷல் அப்டேட்

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் இணையும் நடிகர்கள் அறிவிப்பு,Vishal in marak antony movie cast announcement | Galatta

தனக்கே உரித்தான ஸ்டைலில் அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் விஷால். அந்த வகையில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக சமீபத்தில் வெளிவந்த லத்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் விஷால் நடிப்பில் அடுத்து தயாராகும் திரைப்படம் மார்க் ஆண்டனி.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் நாடோடிகள், ஈசன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, இணைந்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் மார்க் ஆண்டனி படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Actress #Abhinaya As Vedha From the world of #MarkAntony #FromTheWorldOfMarkAntony

A @gvprakash Musical! 🎼@VishalKOfficial @vinod_offl @Adhikravi @mee_sunil @riturv @iam_SJSuryah pic.twitter.com/PqfoqrciiA

— Vishal Film Factory (@VffVishal) January 23, 2023

From the world of #MarkAntony, Malaysian actor DSG as ThangaRaj the Gold😎🔥👌🏼

A @gvprakash Musical! 🎼@VishalKOfficial @vinod_offl @Adhikravi @mee_sunil@riturv @iam_SJSuryah pic.twitter.com/erQ3fmD4oA

— Vishal Film Factory (@VffVishal) January 22, 2023

சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம் - கவுண்டமணியின் ஃபேவரட் வசனத்தில் டைட்டில்! செம்ம அறிவிப்பு இதோ
சினிமா

சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம் - கவுண்டமணியின் ஃபேவரட் வசனத்தில் டைட்டில்! செம்ம அறிவிப்பு இதோ

RJவா ஒரு Salary வாங்கீருப்பீங்க.. இப்ப வாங்குற Salaryல Happyயா? தன் சம்பளம் குறித்து மனம் திறந்த RJபாலாஜி! வீடியோ உள்ளே
சினிமா

RJவா ஒரு Salary வாங்கீருப்பீங்க.. இப்ப வாங்குற Salaryல Happyயா? தன் சம்பளம் குறித்து மனம் திறந்த RJபாலாஜி! வீடியோ உள்ளே

போட்றா வெடிய! பாக்ஸ் ஆபீஸின் ஆட்டநாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

போட்றா வெடிய! பாக்ஸ் ஆபீஸின் ஆட்டநாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!