தர்பார் பட நடிகர் சுனில் ஷெட்டிக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் KLராகுல்... கோலாகலமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள் இதோ!

கோலாகலமாக நடைபெற்ற கிரிக்கெட் வீரர் KLராகுலின் திருமணம்,indian cricketer kl rahul got married with athiya shetty | Galatta

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் KL ராகுல் தற்போது காதல் திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுனில் ஷெட்டி அவர்களின் மகளும் பிரபல இளம் ஹிந்தி நடிகையுமான அதியா ஷெட்டியை KL.ராகுல் கரம் பிடித்துள்ளார்.

தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தில் வில்லனாக நடித்த சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியும், கிரிக்கெட் வீரர் KL.ராகுலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் நேற்று ஜனவரி 23ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இரு வீட்டருக்கும் நொறுங்கிய வாட்டாரத்தோடு மகாராஷ்டிராவின் மலை பிரதேசங்களில் ஒன்றான கண்டிலா பகுதியில் இருக்கும் சுனில் ஷெட்டின் பண்ணை வீட்டில் எளிய முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு பாலிவுட் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மும்பையில் பெரிய அளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனது திருமணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ “உனது வெளிச்சத்தில் இருந்து எப்படி நேசிக்க வேண்டும் என நான் கற்றுக் கொள்கிறேன்” “இன்று எங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் உடன் வீட்டில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அன்பு நிறைந்த இதயத்துடன், நன்றி உணர்வோடு இந்த ஒற்றுமை பயணத்தில் உங்களது ஆசிர்வாதங்களை வேண்டுகிறோம்” என KL.ராகுல் பதிவிட்டுள்ளார். மேலும் தனது திருமண புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Athiya Shetty (@athiyashetty)

RJவா ஒரு Salary வாங்கீருப்பீங்க.. இப்ப வாங்குற Salaryல Happyயா? தன் சம்பளம் குறித்து மனம் திறந்த RJபாலாஜி! வீடியோ உள்ளே
சினிமா

RJவா ஒரு Salary வாங்கீருப்பீங்க.. இப்ப வாங்குற Salaryல Happyயா? தன் சம்பளம் குறித்து மனம் திறந்த RJபாலாஜி! வீடியோ உள்ளே

போட்றா வெடிய! பாக்ஸ் ஆபீஸின் ஆட்டநாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

போட்றா வெடிய! பாக்ஸ் ஆபீஸின் ஆட்டநாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

LCUல் வருவதனால்... விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட வேற லெவல் அப்டேட் கொடுத்த ஃபக்த் பாஸில்! விவரம் இதோ
சினிமா

LCUல் வருவதனால்... விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட வேற லெவல் அப்டேட் கொடுத்த ஃபக்த் பாஸில்! விவரம் இதோ