பிக் பாஸ் 6 முடிவுக்கு வரும் நிலையில் குக் வித் கோமாளி telecast date – அட்டகாசமான புது டீசர்!

குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பாகும் தேதி இதோ - Cook with comali telecast date announced | Galatta

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொலைக்காட்சியாக பல தசாப்தங்களாக இருந்து வருபவை விஜய் டீவி. மக்களின் அபிமான நிகழ்சிகளை பல ஆண்டுகளாக சளைக்காமல் கொடுத்து வருகின்றது விஜய் டீவி. சீரியல் படங்கள் என்று பல அவதாரங்களை எடுத்தாலும் நிகழ்சிகளுக்கு புகழ் பெற்றது எனலாம். அந்த அளவு இதில் ஒளிபரப்பப்படும் பெரும்பாலான நிகழ்ச்சி காலம் கடந்து மக்கள் மத்தியில்  நீங்கா இடம் பிடித்துள்ளது. குறிப்பாக ‘நீயா நானா’, ‘ஜோடி’, ‘சூப்பர் சிங்கர்’ போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் விஜய் டீவி தொடக்கத்திலிருந்தே சீசன் சீசன் களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகிறது. அந்த சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்சிகளின் வரிசையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமையல் தெரிந்த பிரபலங்களுடன் சமையலில் ஒரு அடிப்படையும் தெரியாத பிரபலங்கள் இணைந்து சமைக்கும் நிகழ்ச்சி இது. சேட்டைகளும் அட்டகாசமான கிண்டல் கேளிகளுடன் வகைவகையான ருசியான சமையலும் இங்கு நடக்கும். இதனாலே இந்த நிகழ்ச்சி மற்ற சமையல் நிகழ்ச்சியிலிருந்து சற்று விலகி வித்யாசமாக இருக்கும். இதுவரை ஒளிப்பரப்பான மூன்று சீசன்களும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக சீசன் 2 மற்றும் சீசன் 3. முதல் சீசனில் வனிதா, இரண்டாவது சீசனில் கனி மற்றும் மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா வெற்றியாளரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி பிரபலங்கள் புகழ், மணிமேகலை, பாலா, சிவாங்கி, சரத், மதுரை முத்து என்று நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் போகும் நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.அதில் நிகழ்ச்சியின் நடுவரான சமையல் கலை நிபுணர் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் சிறப்பு வேடத்தில் வந்து அசத்தியிருப்பார்கள். மேலும் தொகுப்பாளர் ரக்ஷன் மற்றும் மணிமேகலை, சுனிதா பங்கு பெற்றனர். இவர்களில் இருந்து புதிய கோமாளியாக சிங்கபூர் தீபன், ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  தேதி வெளியீடு இல்லாமல் வெளியான புரோமோ பரவலாக பகிரப்பட்டு வைரலனாது.

தற்போது விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் இறுதி சுற்று இன்று நடைபெறவுள்ளதையடுத்து வரும் வாரத்திலிருந்து புது புது கோமாளிகளுடன் புது பிரபலங்கள் பங்குபெறும் குக் வித் கோமாளி சீசன் 4 வரும் ஜனவரி 28ம் தேதி தொடங்கவுள்ளது. இனி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் குக் வித் கோமாளி 4 ஒளிப்பரப்பாகவுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் தற்போது ஒரு பிரபலமாக ஜொலித்து வருகின்றனர். உதாரணாக நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த புகழ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். ஏற்கனவே அஜித், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் சந்தானத்துடன் படங்களில் நடித்துள்ளார் எனது குறிப்பிடத்தக்கது,  அதன் பின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக வந்த அஷ்வின் இன்று  அவருகென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இளம் நடிகராக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார்.  இவர்கள் வரிசையில் பவித்ரா லஷ்மி, தர்ஷா குப்தா, ஷகீலா, சினிதா, மணிமேகலை, ரம்யா பாண்டியன் என பலருக்கு பல நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

இந்த முறை யாரெல்லாம் போட்டியாளர், யார் கோமாளிகள், என்னென்ன டாஸ்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் குக் வித் கோமாளி ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். தற்போது  குக் வித் கோமாளி ஒளிபரப்பு தேதியையொட்டி வெளியிடப்பட்டுள்ள புரோமோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 

இதுதான் தளபதி 67 ன் புதிய LOOK? - தளபதி விஜயின் MASS LOOK.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..
சினிமா

இதுதான் தளபதி 67 ன் புதிய LOOK? - தளபதி விஜயின் MASS LOOK.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

தளபதி விஜயின்  Special treat..வைரலாகும் வாரிசு கொண்டாட்டம் - Success Meet புகைப்படங்கள்..
சினிமா

தளபதி விஜயின் Special treat..வைரலாகும் வாரிசு கொண்டாட்டம் - Success Meet புகைப்படங்கள்..

விஷாலின் மார்க் ஆண்டனியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெயிலர் பட நடிகர்  - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

விஷாலின் மார்க் ஆண்டனியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெயிலர் பட நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..