நானே வருவேன் படத்தின் அசத்தலான ரெண்டு ராஜா வீடியோ பாடல் !
By Aravind Selvam | Galatta | October 11, 2022 18:34 PM IST

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன்.
காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக செல்வராகவன் தனுஷுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த படத்தினை தமிழகத்தின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு , வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு,ஸ்வீடன் நடிகை Elli AvrRam,செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
செப்டம்பர் 29ஆம் இந்த படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான ரெண்டு ராஜா பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Here is the new bonus song video from Dhanush's Naane Varuvean - treat for fans!
01/10/2022 07:50 PM