பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 ஆரம்பித்ததிலிருந்தே ஆரி மற்றும் அனிதாவுக்கு வாக்குவாதம் நடந்து கொண்டு தான் இருந்தது. ஒரு கட்டத்தில் நேற்று ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது அனிதாவின் கணவர் பெயரை ஆரி சொல்லிவிட்டார். உடனே பொங்கிய அனிதா என கணவர் பெயரை சொல்லாதே என கோபத்துடன் கத்தினார். நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. நீங்கள் சொன்னதை தான் நான் இங்கே அப்படியே சொல்கிறேன் என ஆரி விளக்கம் அளித்தாலும் அவர் கேட்கவில்லை.

சண்டை தொடர்ந்து நடைபெற்றது. அனிதாவுக்கு ஆதரவாக ரம்யா நரித்தந்திரத்துடன் அவரிடம் பேசினார். ஏற்கனவே ரம்யா ஆரிக்கு எதிராக பேசி வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பின் கேமரா முன்பு வந்து பேசிய ஆரி அனிதா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டார். தான் எந்த தவறான நோக்கத்துடனும் உங்கள் பெயரை சொல்லவே இல்லை என விளக்கம் கொடுத்தார்.

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. B for Ball, C for Catch என அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து இந்த டாஸ்கில் பங்கேற்றனர். ஆரி மற்றும் பாலா உள்ளிட்டவர்கள் ஒரு டீமிலும் ரியோ மற்றொரு டீமிலும் இருக்கின்றனர். பைப் மூலமாக வரும் பந்தை கேட்ச் பிடிக்கவேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். பாலாஜி உயரமாக இருப்பதால் பால் வந்து விழும் இடத்திற்கு அருகிலேயே நின்றுகொண்டு இருந்தார். அதனால் அவர் கைக்கு தான் அதிகம் பந்துகளும் வந்திருக்கிறது.

அதன் பின் ஆரி அந்த இடத்திற்கு வந்த போது அவருக்கும் ரியோவுக்கும் வாக்குவாதம் வெடித்து இருக்கிறது. எங்களை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உங்க டீமில் முதலில் கேளுங்கள். பாலா நிற்கிறார். கரெக்டாக தெரிகிறது இங்கு தான் பால் வருகிறது என. அவருக்கு பின் ஆஜித் நிற்கிறார். நான் எங்கே நிற்பேன் என கோபமாக கேட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் தான் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவாக வெளிவந்து இருக்கிறது. அதனால் அவர்கள் நடுவில் பெரிய வாக்குவாதம் நடைபெற்று இருக்கும் என தெரிகிறது. இதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், அடுத்த சண்டை ரியோ மற்றும் ஆரி இடையே தானா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.