பிக் பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட கோழி பண்ணை luxury பட்ஜெட் டாஸ்க் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது. போட்டியாளர்கள் நேற்று டாஸ்கை சரியாக செய்யாமல் ஒப்பந்தம் போடுகிறேன் என்கிற பெயரில் சொதப்பிக்கொண்டு இருந்தனர். இதனால் நேற்றைய எபிசோடு மிகவும் போர் அடித்தது என பிக் பாஸ் ரசிகர்கள் ட்விட்டரில் புலம்பியதையும் பார்க்க முடிந்தது.

இன்று இரண்டாவது நாளாக டாஸ்க் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று போட்டியாளர்கள் சற்று ஆக்ரோஷமாக விளையாட தொடங்கி இருக்கிறார்கள். அது இன்றைய ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் நெருக்கமாக இருந்தாலும் டாஸ்கில் பாலாஜி அவரிடம் ஆக்ரோஷமாக தான் இருந்திருக்கிறார். ஷிவானியின் முட்டையை தொட்டுட்டேன் என பாலாஜி கேமரா முன்பு வந்து கூறினார். 

மேலும் ஆரி கோபமாக ரம்யா, அர்ச்சனா ஆகியோருடன் சண்டை போட்டிருப்பதும் காட்டப்பட்டு இருக்கிறது. சில போட்டியாளர்கள் இடையே டாஸ்க் தொடர்பாக கடும் வாக்குவாதமும் தொடர்ந்து நடைபெற்று இருக்கும் நிலையில் அர்ச்சனா தரமான சம்பவம் இருக்கு என கோபத்துடன் கூறினார். 

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அர்ச்சனாவின் முட்டையை உடைக்க முயல்கிறார்கள் ஹவுஸ்மேட்ஸ். நவுரு நவுரு என சோம் சேகர் அர்ச்சனா வைத்திருக்கும் முட்டையை குறி வைக்கிறார். தொட்டுட்டேன் என்று சோம் சேகர் கூற, தொடவில்லை உடைத்திருக்கிறீர்கள் என ஹவுஸ்மேட்ஸ் சொல்கின்றனர். 

கோழியாக இருக்கும் அர்ச்சனா கோபத்துடன் எழுந்து சோம் சேகரின் செயல் பற்றி பேசுகிறார். பிக்பாஸ் கேமராவிடம் சென்று, பாருங்க பிக்பாஸ் அர்ச்சனா தான் அந்த முட்டையை உடைச்சாங்க... நான் தொட்டேன் என்று கூற, அங்கிருந்து ஆக்ரோஷத்துடன் அடுத்த சண்டைக்கு கிளம்புகிறார் அர்ச்சனா. இடது கையில் எப்படி உடைக்கமுடியும் என்று சோம் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறினாலும், அர்ச்சனா விடுவதாக தெரியவில்லை. அன்பு கேங்கில் அடுத்த விக்கெட்டா ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.