சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறு வயது சிறுமியை உள்ளூர் நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்தார். இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பாகிஸ்தானில் அதிகரித்தது வந்தன.

இவ்வாறு பாகிஸ்தானில் பாலியல் குற்ற வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 


குற்றவாளிகளுக்கு மரண தண்டனையாக  பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. அப்படி செய்தால் உலக மனிதநேய ஆணையத்துக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதால் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  


பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோரின் தேசிய அளவிலான பட்டியல் தயாரிக்கப்படும். அதில் அதி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதை அவசர சட்டமாக எடுத்துக்கொண்டு, , பாலியல் குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் 4 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். 


இந்த சட்டத்தின் படி , பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செயல்பட்டு வற்புறுத்தி பாலியல் செய்வது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது போன்ற செயல்கள் அனைத்து சட்டவிரோதமாக கருதப்படும். இதன்படி குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.


இந்த அவசர சட்டத்தை பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளித்து இருந்த நிலையில், தற்போது அந்த அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்விலும் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசர மசோதாவை ,  சட்டமாக மாற்ற ஆளும் அரசுக்கு 120 நாட்கள் அவகாசம் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.