புது புது டாஸ்க்கால் சுவாரஸ்யமாகி வருகிறது பிக்பாஸ் வீடு. ஒவ்வொரு டாஸ்க்கின் போதும் ஏதாவது பிரச்சனை கிளம்புகிறதே என ரசிகர்கள் ஒருபுறம் புலம்பினாலும், மறுபுறம் அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள் பிக்பாஸ் பிரியர்களை கவர்ந்து வருகிறது. நேற்றய ஹைலைட்ஸ் என்னவென்றால், ஷிவானி கேப்டன் ரம்யாவிடம் சென்று தன்னால் கிட்சன் மற்றும் பாத்திரம் கழுவுவது என இரண்டு வேலைகளையும் செய்ய முடியாது அதனால் இதை மாற்றுங்கள் என கேட்டார். 

இதை பற்றி ரம்யா அனைவர் முன்னிலையில் கேட்கும் போது சில போட்டியாளர்கள் விருப்பம் போல volunteer செய்து பணிகளை செய்யலாம் என கூறினார். ஆனால் அதை பெஸ்ட் மற்றும் boring போட்டியாளரை தேர்ந்தெடுக்கும்போது சொல்ல கூடாது என ஆரி கூறினார். அதை எப்படி நீங்கள் சொல்லலாம் என மற்றவர்கள் சொல்ல, ஆரி கோபத்தில் அங்கிருந்து எழுந்து சென்றார். இது தொடர்பாக பாலாஜிக்கும் ஆரிக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. அது சரி பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதம் ஒன்றும் புதிதல்ல. 

நேற்றைய நாளில் பிக் பாஸ் வீடு கோழி பண்ணையாக மாற்றப்பட்டு புது டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்களின் புகைப்படத்துடன் தங்க முட்டை அனுப்பப்படும். அந்த நபர் கோழியாக மாறி அந்த முட்டையை கூட்டில் வைத்து பாதுகாக்க வேண்டும். மற்ற போட்டியாளர்கள் நரிகளாக அந்த முட்டையை பெயிண்ட் தொட்ட கை உடன் தொட வேண்டும். அப்படி தொட்டுவிட்டால் கோழி அவுட். அவரிடம் இருக்கும் பணம் தொடும் நரிக்கு வந்துவிடும்.

அதே போல் நரியின் வாலை கோழி தொட்டுவிட்டால் அந்த நரி அவுட். இது தொடர்பாக கோழி நரிகளுடன் ஒப்பந்தமும் போட்டுக்கொள்ளலாம். அதற்காக பணமும் ஒவ்வொருவருக்கும் 200 ருபாய் வழங்கப்படுகிறது. அதை வைத்து ஒப்பந்தம் போட்டு கொள்ளலாம். ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என கூறப்பட்டு இருந்ததால் பல போட்டியாளார்கள் இஷ்டத்திற்கு பல ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டனர். பாலாஜி, ஆஜித் உட்பட சிலர் கோழியே முட்டையை விட்டு கொடுப்பது போல் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்.

கோழியே எப்படி முட்டையை கொடுக்கும் என லாஜிக்காக ரியோ கேள்வி கேட்டார். ரியோ தான் தனியாக விளையாடுவதாக கூறி அர்ச்சனா கேங்கில் இருந்து விலகிவிட்டார். அதுமட்டுமல்லாமல் ரியோ மற்றும் அர்ச்சனாவிற்கும் நேற்று மனஸ்தாபம் ஏற்பட்டது. அன்பு கேங்கில் இப்படி ஆகிறதே என மீம்ஸ் கொண்டு வறுத்தெடுத்தனர் நெட்டிசன்கள். 

இந்நிலையில் 73-ம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஷிவானியின் முட்டையை பாலாஜி வைத்திருக்கிறார். ஒரு பக்கம் பாலாஜி சிறப்பாக விளையாடி வசூல் செய்ய, அனிதா மற்றும் ஆரி அதிரடி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அடிக்கடி ரூல் மாத்துரிங்க என கேபி ரம்யாவிடம் புலம்பி தீர்க்கிறார். சிறப்பான தரமான சம்பவங்கள் இருக்கு என அர்ச்சனா கூற ப்ரோமோ முடிகிறது.