வெள்ளை சர்க்கரை உடலுக்கு கெடுதல் என்று இப்போது பரவலாக எல்லோருக்கும் விழிப்புணர்வு வந்து இருக்கிறது. ஒருவர் நாளொன்றுக்கு ஐந்து டீஸ்பூன்வரை சர்க்கரை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி இருக்கிறது. 


அதிகப்படியான சர்க்கரை எடுத்துக்கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என பார்ப்போம். சர்க்கரை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் போது  சருமம் பொலிவிழந்து விடும். விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுகிறது. சரும ஆரோக்கியத்துக்கான `கொலாஜென்’ மற்றும் `எலாஸ்டின்’ போன்ற புரதங்களின் தரத்தை சர்க்கரை குறைகிறது. 


சர்க்கரையால் உடலின் பல பகுதிகளில் கெட்ட கொழுப்புகள் சேர வழிவகை செய்யும். இதனால், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகள்  தொப்பையை உண்டு செய்யும். மேலும் குளூக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உடலில் சேர்ந்து தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. 


வெறும் காபி, டீ, ஸ்வீட்ஸ் போன்றவற்றில் மட்டும் தான் சர்க்கரை இருக்கிறது என நினைவில் கொண்டு இவற்றை மட்டும் குறைப்பதில் அர்த்தம் இல்லை. கார்பனேட்டடு பானங்கள், குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள் என நாம் அன்றாடம் சாப்பிடும் பல்வேறு உணவுகளிலும் சர்க்கரை கலந்தே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


சர்க்கரையிலிருக்கும் ஃப்ரக்டோஸ் மெதுவாகத்தான் செரிமாவதால் அடிக்கடி செரிமானக் கோளாறுகள் உண்டு பண்ணும். சிலருக்கு அளவுக்கு அதிகமாக  சர்க்கரை சேர்த்துக்கொள்ளும்போது பசியை அதிகமாக தூண்டிவிட்டு, தூக்கமின்மையை ஏற்படுத்தும்.