சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்து மிறீய மாணவர்.. படக்குழு அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ இதோ..

அபர்ணா முரளியிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் - Kerala student misbehaves with Aparna balamurali on stage | Galatta

பிரபல மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தில் நடித்தார். பின் 2020 ல் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததால் மக்களின் பேராதரவை பெற்றார். அதுமட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக பெற்றார். பின் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அபர்ணா ‘தீதும் நன்றும், ‘வீட்ல விசேஷம், ‘நித்தம் ஒரு வானம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது அபர்ணா தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அபர்ணா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தங்கம்’ என்கிற மலையாள படம் வரும் ஜனவரி 26 – ந் தேதி வெளியாகவுள்ளது. சஹீத் அராபத் இயக்கத்தில் வினீத் ஸ்ரீநிவாசன் நடித்துள்ள இப்படத்தில் அபர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்க படக்குழு பல இடங்களில் புரோமோஷன் வேலைகளிலும் இறங்கியுள்ளனர். அதன்படி தங்கம் திரைப்படத்தின் புரோமொஷனுக்காகவும் கல்லூரி தொழிற்சங்கம் திறப்பு விழாவிற்கு கேராளவில் அமைந்துள்ள ஒரு சட்டக் கல்லூரி ஒன்றில் அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அங்கு மேடையில் அமர்ந்திருந்த அபர்ணா பாலமுரளிக்கு கல்லூரி மாணவர் ஒருவர்  அவருக்கு கொடுக்க வந்தார். அப்போது பூ கொடுத்துவிட்டு அவர் அபர்ணா பாலமுரளியை வலுக்கட்டாயமாக நாற்காலியில் எழ வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கும்படி சொல்லி அபர்ணா தோள் மீது கல்லூரி மாணவர் கை போட முயற்சித்துள்ளார். அதனை சற்றும் விரும்பாத அபர்ணா சிரித்தபடி தர்மசங்கடத்துடன் நழுவி விலகினார். பின் இதுகுறித்து கல்லூரி அலுவலர் மன்னிப்பு கேட்கும்படி அறிவுறுத்த பின் மாணவர் அபர்ணா பால முரளியிடம் மன்னிப்பு கேட்டார்  அதன் பின்பும் இருந்தும் பதட்டத்துடன் விழாவில் தொடர்ந்தார் அபர்ணா பாலமுரளி. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

நடிகை அபர்ணா பலமுரளியின் தோளில் அனுமதியின்றி கை வைத்த கல்லூரி மாணவன்! #AparnaBalamurali #Kerala #LawCollege #Aparna #CollegeStudent #Galatta pic.twitter.com/xg6KPkGtiX

— Galatta Media (@galattadotcom) January 20, 2023

இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து கல்லூரி தொழிற்சங்கம் மன்னிப்பை தெரிவித்தது. அதில், “ஜனவரி 18, அன்று  சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக விழாவில் திரைப்பட நடிகருக்கு நேர்ந்த எதிர்பாராத சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. அந்த சம்பவத்தின் போது, ​​​தொழிற்சங்க அதிகாரி அத்தகைய நடத்தையைத் தடுக்க முயன்றது மேலும் இதுகுறித்து வருத்தங்களையும் தெரிவித்தது. இந்த சம்பவத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு மனப்பூர்வமாக வருந்துகிறது தொழிற்சங்கம்” என்று குறிப்பிட்டுள்ளது.

 

View this post on Instagram

A post shared by COLLEGE UNION 2022-23 (@glceunion22_23)

 

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை - அடுத்தடுத்த ஜெயிலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை - அடுத்தடுத்த ஜெயிலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

 விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது?.. இப்போ அவர் உடல்நிலை எப்படி இருக்கு?.. – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் இதோ..
சினிமா

விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது?.. இப்போ அவர் உடல்நிலை எப்படி இருக்கு?.. – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் இதோ..

யார் Real winner வாரிசு?.. துணிவு?.. – உண்மையை உடைத்த தயாரிப்பாளர் தனஞ்செயன்.. சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

யார் Real winner வாரிசு?.. துணிவு?.. – உண்மையை உடைத்த தயாரிப்பாளர் தனஞ்செயன்.. சுவாரஸ்யமான தகவல் இதோ..